தேர்தல் நாள் நெருங்குவதால், வாக்கு சேகரிப்பு அதிரையில் கடும் சூடு பிடித்துள்ளது. இன்று ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் வேட்பாளர்கள் அனைவர்க்கும் சங்கம் சார்பாக வாக்குகள் சேகரிக்க இன்றுமுதல் சங்கத் தலைவர், துணை பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் களமிறங்கினர். துவக்கமாக 12வது வார்டு வேட்பாளர் சகோ. எம்.ஏ ஹனிஃபா அவர்களுக்கு இன்று மாலை வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தல்கள் 17.10.2011 மற்றும் 19.10.2011 ஆகிய இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. மொத்தம் 4.64 கோடி வாக்காளர்கள் இந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க உள்ளார்கள். நம் பகுதியில் இரண்டாம் கட்டமாக 19.10.2011 அன்று தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறுப்பிடத்தக்கது.
வாக்கு சேகரிப்பின் போது, செட்டியா குளத்தின் அவலநிலையை பார்வையிடும்
சங்கத் தலைவர்.
2 பின்னூட்டங்கள்:
பேசும் படங்களில் நிறைவில் இடம் பெற்றிருக்கும் மூன்று படங்கள் சொல்லாமல் சொல்லும் புகார்கள் ஏராளம் நிறைந்திருப்பதை அழகுற பதிந்தது அருமை !
நல்லவேலை, குப்பைகளையும் சேர்த்து படம் எடுத்தற்க்கு நன்றி,
இப்பதான் செட்டியா குளம் போல தெறிகிறது. இல்லையென்றல் கேரளாவில் உள்ள ஏதோ ஒரு சோலைவணம் போல் இருந்திருக்கும்.
கொசுக்களும் சாக்கடையும் பச்சை பசுமையாய் காட்சி தரும் வெங்காய தாமரையின் அடியில் அல்லவா இருக்கிறது.
மறந்துடாதிய ஹனீபா காக்கா, இந்த பிரச்சனையை சரி செய்தாலே அதிரை வரலாற்றில் முதல் இடம் பிடிப்பீர்கள் இன்ஷா அல்லாஹ்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment