அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, October 31, 2011

வக்கீல் அ.அப்துல் முனாப் BA .,BL அவர்களின் நன்றி அறிவிப்பு


அன்புடையீர், 
       அஸ்ஸலாமு அலைக்கும்..

  நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு 1142 வாக்குகள் இறைவனின் நாட்டத்தால் பெற்றேன்.தேர்தல் விதிகளுக்குப்புறம்பான பணபுயல் இடைவிடாது வீசிய நிலையிலும் அதில் சற்றும் நிலைகுலையாத நல்ல உள்ளங்கள் அளித்த விலைமதிக்க முடியாத வாக்குகள் தன அது.

 என்னுடைய மனம் திறந்து பேசுகிறேன் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பிரசுரத்தில் என்னுடைய உறுதிமொழியை நம்பி,என்மேல் வைத்துள்ள உண்மையான அன்பினாலும்,பாசத்தினாலும்,மேலும்சிலர் உங்களுக்கு அள்ளிகொடுக்க முன்வந்தும் அதை துச்சமென கருதிஇலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற சொல்லை தன் நெஞ்சத்தில் வைத்து கடமை தவறாத கண்ணியவான் களாகிய நீங்கள் எனக்கு அளித்த வாக்கிற்கு என் ஆள் மனதிலிருந்து பல நூறு நன்றிகளை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்.

வீடு,வீடாக சென்று இரவு,பகல் பாராமல் எங்களுடைய தகுதி எதிர்கால செயல்பாடுகள் இவைகளை மட்டும் கருத்தில் கொண்டு வாக்கு சேகரிப்பு என்ற உன்னதமான பணியில் நாங்கள் ஈடுபட்டிருந்தபோது,பெரும்பாலான மக்கள் மிக உறுதியாக எங்கள் வாக்கு நிச்சயம் உங்களுக்கு என்று சொன்னதை நம்பி நாங்கள் வெற்றி களிப்பில் இருந்தோம்.அனால் எதிர்கட்சியின் ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு இவ்வளவு ஆதரவுகளா! இவ்வளவு ஓட்டுகளா! என்று ஆச்சரியப்பட்டு அதற்க்கு வைக்கிறேன் பாரு வேட்டு என்று இரவென்றும் பாராமல்,நடுநிசி என்று பாராமல் கதவுகளை தட்டி வாரி இறைத்த நிகழ்ச்சி உண்மையிலேயே மனவேதனையை உண்டாக்கியது.

மனவேதனை எதற்காக? வாக்குகள் மாறிப்போகிறது என்பதற்காகவா? இல்லை!இல்லை!     
  • இலஞ்ச அச்சம்,இலஞ்ச கூட்சம் இவைகளை மரத்து அவைகளை நடைமுறை சர்வசாதாரணம் என்ற உணர்வில் இந்த மனிதம் முழுவதும் மாறி பாழாகிவிடக்கூடாது என்பதற்காக!
  • இலஞ்சம் சுவர்க்கத்திற்கு தடை என்ற இறை கோட்பாட்டால் அற்ப பதவிக்காக ஐவேளை தொழுகை,ஷரியத் இவைகளுடன் ஒழுகி வாழும் மனிதனுக்கு நாளைய நிரந்தர வாழ்வின் சொர்க்கம் கிடைக்காமல் போய்விடுமோ என்பதற்காக!
சிந்தித்து பார்க்கட்டும்.ஊருக்கு ஒரு மாற்றம் தேவை என்று கருதியவர்களுக்கு அது மாற்றமா அல்லது ஏமாற்றமா என்பதை யார் அறிவார்?
பணமா? பாசமா? பணம் முந்தியது! பாசம் பிந்தியது! பண மழையா? பாச மழையா?

பண மழை பெய்தது! பாசமழை பொய்த்தது!
எனவே எதிர் வரும் காலங்களிலாவது பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்குகோடிகளை கொடுத்து தான் அதை பெற வேண்டும் என்ற அவல நிலையை மாற்றி அடிப்படை செலவுகளை மட்டும் செய்தும்,உள்ளாட்சி மன்ற தேர்தல் ஊர் சம்பந்தப்பட்டதால் ஜநாயக படுகொலையான,மார்க்கத்திற்கு உட்படாத பிரித்தலும் தெரு உணர்வு ஒழித்து ஊர் உணர்வு மிகைக்க யாரேனும் ஒரு நல்லவர்,வல்லவர் ஹராம்,ஹலால் பேணக்கூடிய எச்சூழலிலும் மனித நல் வாழ்வு சட்ட மீறாது நடப்பவர்,எவரோ அவர் அந்த இடத்தை பெறுவதற்கு நாம் இப்பொழுது முழு முயற்சி செய்வோம்.சிந்திப்போம் அதன் படி செயல் படுவோம்.முடிந்தால் எச்செலவுகளும் இல்லாத UN OPPOSED என்கிற எதிர்ப்பில்லா ஒரு மனதான தேர்வை உண்டாக்குவோம் .
மேலே சொன்ன 1142 வாக்குகள் பெற்று தந்த கண்ணியமிக்க வாக்காளர்களுக்கு மீண்டும்,மீண்டும் நன்றி! தேர்தல் அமைதியாக நடத்த ஒத்துழைத்த அனைத்து பொதுமக்களுக்கும் நன்றி.
வெற்றி என்பது இறைவன் பொருத்தத்துடன் கூடிய வெற்றியாக என்றென்றும் உண்டாகட்டுமாக. ஆமீன்.
உண்மை வெல்லும்! அமைதி வெல்லும்!! விவேகம் வெல்லும்!!!
             
உங்கள் உண்மையுள்ள,
  அ.அப்துல் முனாப் BA .,BL .,
 வழக்கறிஞர்,நோடறி பப்ளிக்,உறுதிமொழி ஆணையர் (Oath Commissioner) 

15 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பக்குவம் நிறைந்த நன்றி மடல்.... நம் நாட்டின் அவல நிலையை சில வரியில் சொல்லி விடலாம் சட்டத்துறை மந்திரிக்கு சட்டமே தெரியாது, வேறு எந்த துறையாக இருந்தாலும் அத்துறைக்கு சம்பந்தமே இல்லாத நபரை தான் அமைச்சராகுகிரார்கள், மேலை நாடுகளின் வளர்ச்சிக்கும் நம் நாட்டின் தளர்ச்சிக்கும் இது தான் காரணம். நிச்சயம் தங்களுக்கு இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, விடா முயற்சி நிச்சயம் பலன் தரும் இறைவன் நாடினால் அடுத்த முறை தங்களுக்கு சாதகமாக இருக்கும் - மதியழகன்

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பக்குவம் நிறைந்த நன்றி மடல்.... நம் நாட்டின் அவல நிலையை சில வரியில் சொல்லி விடலாம் சட்டத்துறை மந்திரிக்கு சட்டமே தெரியாது, வேறு எந்த துறையாக இருந்தாலும் அத்துறைக்கு சம்பந்தமே இல்லாத நபரை தான் அமைச்சராகுகிரார்கள், மேலை நாடுகளின் வளர்ச்சிக்கும் நம் நாட்டின் தளர்ச்சிக்கும் இது தான் காரணம். நிச்சயம் தங்களுக்கு இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, விடா முயற்சி நிச்சயம் பலன் தரும் இறைவன் நாடினால் அடுத்த முறை தங்களுக்கு சாதகமாக இருக்கும் - மதியழகன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நன்றி மறப்பது நன்றன்று...

எந்த மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்களோ அம்மக்களின் நலனுக்காக தேர்ந்தெடுக்க்கப்பட்டிருக்கும் புதிய பேரூராட்சித் தலைவருடன் நடபு பாரட்டி அம்மகளின் அத்தியாவசிய வேண்டுகோள்களை நிறைவேற்றிட முயற்சியுங்கள்... இன்ஷா அல்லாஹ்.

அதிகாரம் கையிலிருந்தால்தான் செய்வேன் என்று ஒதுங்கியவர்களைப் போல் இல்லாமல் மக்களோடு மக்களாக கலந்து அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னின்று செயல்படுங்கள், வெற்றிகள் வெகுதூரத்தில் இலலை.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நன்றிக்கு நன்றி முனாஃப் காக்கா!
நடந்தவை நாயன் நாட்டப்படி நடந்துவிட்டது.பகையுணர்வு வேன்டாம்.
எதிர்காலத்திலும் அவன் நாட்டபடியே நடக்கும்.துஆ செய்வோம்.
அதுவரை ஆள்பவரை அனுசரித்து அதிரையை மேம்படுத்த ஒத்துழைக்கலாமே!

Shameed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எந்த நேரத்திலும் போன் செய்து விவரமும் விளக்கமும் கேட்டால் முகம் சுளிக்காது பதில் சொல்லும் முனாப் அவர்கள் நேர்மையான முறையில் பஞ்சயாத்து போர்ட் தேர்தலை சந்தித்தவர் என்ற பெருமைக்கு உரியவர்

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமை.......முனாப் அவர்களே. அடுத்த தடவை நீங்கள் துணை தலைவருக்கு போட்டியிடுங்கள். நீங்கள் துணை தலைவராட்டிங்கன்னா மேலையும் கீழையும் நடக்கும் லஞ்சத்த ஒழிக்கலாம். ஏன்னா ஏதாவது காரியம் என்று பஞ்சயத் போர்டு போனா அந்த 21 மென்பர்களும் க்யூவில் நிக்கிறாங்க. ஒருத்தர் முடியுங்குறாங்க, இன்னொருவர் முடியாதுங்குறாங்க. அதனால் உங்களால ஒண்ணுமே செய்யமுடியாட்டயும் மக்கள் மன்றத்துக்கு கொண்டுவரலாம்.

அப்புறம்..............

நல்ல வேல., நீங்க அய்டாவுக்கு நன்றி சொல்லலே. காரணம் அய்டா மட்டும் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்காட்டி அஸ்லம் சேர்மனா வந்திருக்க முடியாது. கண்டிப்பா அஜீஸ் வந்திருப்பார்.

இது தெரியாம, உங்க அருமை புரியாம என்னன்னெமோ சொல்லிப்புட்டாங்க.
thuklaknews.gmail.com

Muhammad abubacker ( LMS ) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//சிந்தித்து பார்க்கட்டும் ஊருக்கு ஒரு மாற்றம் தேவை என்று கருதியவருக்கு அது மாற்றமா அல்லது ஏமாற்ற்றமா என்பதை யார் அறிவார் ?
பணமா?பாசமா? பணம் முந்தியது , பாசம் பிந்தியது! பண மழையா? பாச மழையா? //

ஆஹா இந்த வசனம் படிப்பதற்கு நல்லா தான் இருக்கு.ஆனால்.காக்கா அப்துல் முனாப் BA BL அவர்கள் செய்தது நல்லா இல்லையே! சம்சுல் இஸ்லாம் சங்கமும்.முக்கிய பிரமுகர்களும்.எவ்வளவோ வக்கீல் சாரை சேர்மன் பதவிக்கு போட்டி இட வேண்டாம் சொல்லியும் கெஞ்சியும்.சட்டம் தெரிந்த வல்லுநர் சங்கத்தை மீறியது ஒரு புறம் . முஸ்லிம் லீக் கட்சி சார்பாக நிக்கபோறேன் என சொல்லி விட்டு பஸ்ஸில் பயணம் செய்ததுதான்.பாசமுள்ளவர்களை மிரள செய்தது.

பணம் முந்தியது என்று சொன்னால்? அதிமுகவும்,காங்கிரசும்.ஏன் பிந்தி போனார்கள்.அவர்களும் முந்தி
முந்தி இருக்க வேண்டியதுதானே?

வெற்றி தோல்வி என்பது இயல்பு .அதற்காக தாங்களுக்கு ஒட்டு போடாதவர்களை பாசமில்லாதவர்கள்
என்று சொல்லி விடாதீர்கள்.

அதிரைக்கு மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று 12.வேட்பாளர்களின் சார்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது அறைகூவல் விடப்பட்டது.

சகோதரர்; S .H . அஸ்லம் அவர்களின் மகத்தான சேவைகளை புரிந்துக் கொண்ட அதிரை மக்கள்.அதிரை பேரூராட்ச்சிக்கு தகுதியான தலைவர்
என தேர்ந்தெடுத்தார்கள்.என்பதை மனமார ஏற்றுக் கொள்ளவேண்டும்.

தோல்வி அடைந்த காரணத்தினால் வெற்றிபெற்றவர்களை.விமர்சனம்
செய்ய செய்ய அவர்களின் தகுதி உயர்ந்துக் கொண்டே போகும்.என்பதை முதலில் விளங்கி கொள்வோம் .

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Assalamu alaikku,
Dear adirai peoples
In future try to select chairman as well as ward members as unoppsed by the help of adirai all muslim jamath sangam under adirai ikkiya jamath. it will help unwanted expenses and time.
A.Ahamed thaha, Al-Khobar, KSA.

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Assalamu alaikku,
Dear adirai peoples
In future try to select chairman as well as ward members as unoppsed by the help of adirai all muslim jamath sangam under adirai ikkiya jamath. it will help unwanted expenses and time.
A.Ahamed thaha, Al-Khobar, KSA.

வெள்ளை ரோஜா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

/ நல்ல வேலை நீங்க அய்டாவுக்கு நன்றி சொல்லலே.காரணம் அய்டாமட்டும் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்காட்டி அஸ்லம் சேர்மனா வந்திருக்க முடியாது.கண்டிப்பா அஜீஸ் வந்திருப்பார்.//

அப்போ (அய்டா) முனாப் அவங்களுக்கு உல் குத்து வேலை பார்த்திருக்கிறது.என்று நீங்க சொல்ல வரியே!

அப்பண்டா நம்ம சேர்மன் அஸ்லம் காக்கா தான் அய்டாவுக்கு மூன்று நன்றி சொல்லணும்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

// அப்போ (அய்டா) முனாப் அவங்களுக்கு உல் குத்து வேலை பார்த்திருக்கிறது.என்று நீங்க சொல்ல வரியே! // இது போன்ற அனுமானம் செய்கின்ற வகையில் கருத்து பதியாமல் இருத்தல் நல்லது - உள்ளங்களை அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே, நல்ல விமர்சனம் நன்மைக்கு வலு சேர்க்கும் வெள்ளை ரோஜவிற்கு தற்போது விளங்கும் என்று நினைகிறேன்

ஊர் குருவி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வெள்ளை (கருப்பு) ரோஜாவுக்கு,

உங்களுடைய கேவலமான கமெண்டை படிக்க நேரிட்டது.

அய்டாவின் சேவையை நன்கு அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன், இறைவனின் நாட்டத்தை மறந்து விட்டீர்கள் போலும். அய்டாவுக்கு ஆரம்பதிளுருந்து இன்றுவரை சொல்லவந்ததை தெளிவாகவும், யாருக்கும் தயவுதாட்சனை இல்லாமல் தைரியமாகவும் சொல்லத்தேரியுமே தவிர நீங்கள் சொல்வதுபோல் உள்குத்து வேலை பார்க்க தெரியாது. தேவை இல்லாமல் யாரையும், அனாவசியமாக சீண்ட வேண்டாம்.

Adirai Vaasam said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நான் அய்டாவின் முக்கிய நிர்வாகியிடம் பேசிய வகையில் சொல்கிறேன். நாங்கள் (அய்டா) முனாபை ஆதரித்தோம் என்று சொல்வதை விட சுயேச்சை வேட்பாளரை தகுதி என்ற அடிப்படையில் ஆதரித்ததுதான் உண்மை. அந்த தகுதி சகோ. அஸ்லம், சகோ. அஜீஸ், சகோ. பாஷீருக்கோ கட்சியில்லாமல், சீரிய முறை ஆளுமை தகுதி இருந்திருந்தால்கூட அவர்களில் யாரையாவது ஒரு நபரை நாங்கள் ஆதரித்திருப்போம். இது வரக்கூடிய காலங்களில் சங்கம் மற்றும் ஜமாஅத் கட்டுப்பாட்டுக்குள் வந்து எந்த கட்சியையும் சாராமல் எல்லோரின் ஒப்புதலின் பேரில் ஒருவரை சுயேட்சையாக நிக்க வைத்து துணிவு மிக்க ஒருவரை தேர்ந்தெடுக்க முடிவுக்கு வரவேண்டும் என்பதன் தொடக்கம் தான் என்று சொல்கிறார்கள். மற்றபடி அய்டா அடுத்த தேர்தல் களத்தில் இறங்காது என்பதும் தெளிவாக தெரிகிறது. (பார்க்க. அய்டாவின் தன்னிலை விளக்கம் மற்றும் வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து காணொளி.)

வெள்ளை ரோஜா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஊர் குருவி--- த மு மு க இயக்கவாதி போலும்.வெள்ளைக்கு பக்கத்தில் கருப்பையும் சேர்த்து இருக்கிறார்.
உல் குத்து என்றவுடன்.உங்களுக்கு சுள்ளென்று குத்துகிறது அல்லவா ? அது போலத்தான்.பொது நல தொண்டான அய்டா ஒரு நபர்க்கும் மட்டும் பகிரங்கமான ஆதரவு தெரிவித்தவுடன்.மற்ற கட்சி காரர்களை கோபம் ஆட்கொண்டது.

// அய்டாவின் சேவையை நன்கு அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன், இறைவனின் நாட்டத்தை மறந்து விட்டீர்கள் போலும். //

அய்டாவின் சேவையை நன்கு அறிந்த உங்களுக்கு இறைவனின் நாட்டத்தை மறந்து விட்டீர்கள் போலும்.என்ற வார்த்தையை யாருக்கு சொல்லணுமோ.அவருக்கு சொல்லாமல்.என்னை பார்த்து சொல்லியதுதான்.உங்களின் அறியாமை புரிகிறது.

யாருக்கு சொல்லணும் என்று தெரிந்து கொள்ளுங்க.

//அவர்தான் மிஸ்டர் துக்ளக் நியூஸ்.
நல்ல வேல., நீங்க அய்டாவுக்கு நன்றி சொல்லலே. காரணம் அய்டா மட்டும் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்காட்டி அஸ்லம் சேர்மனா வந்திருக்க முடியாது. கண்டிப்பா அஜீஸ் வந்திருப்பார்.//

இப்ப ஊர் குருவிக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

ஊர் குருவி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வெள்ளை ரோஜா வுக்கு,

/ நல்ல வேலை நீங்க அய்டாவுக்கு நன்றி சொல்லலே.காரணம் அய்டாமட்டும் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்காட்டி அஸ்லம் சேர்மனா வந்திருக்க முடியாது.கண்டிப்பா அஜீஸ் வந்திருப்பார்.// Thuklak News

//அப்போ (அய்டா) முனாப் அவங்களுக்கு உல் குத்து வேலை பார்த்திருக்கிறது.என்று நீங்க சொல்ல வரியே!// வெள்ளை ரோஜா

நான் உங்களை பார்த்துதான் சொன்னேன். அவர் சாதரணமாக சொன்னதை வழிமொழிந்து சைக்கில் கேப்ல உங்களுடைய உள்குத்து வேலையை பயன்படுத்தி (அவர் சொல்கிறமாதிரி நீங்கள் சொல்கிறீர்களே, இது அதைவிட கேவலம்) அநியாயமா அவர்கள் (அய்டா) மேல பழிசுமத்தியது, அதவிட மோசமான காரியம்ல!!

நன்றி!!

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.