அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, October 1, 2011

முன் அனுபவங்களுடன் உள்ளூர் தேர்தல் களத்தில் அதிரை பிபிசி குழு

கடந்த எட்டு, ஒன்பதாண்டுகளாக நமதூரின் அனைத்துவிதமான தகவல்கள், செய்திகள், நிகழ்வுகளை இணையம் வழியாக அதிரை பொதுமக்களுக்கு வழங்கிய அனுபவம். நமதூர் இளைஞர்களின் கல்வி, தேர்வு முடிவுகள், விளையாட்டு, இளைஞர் மேம்பாடு, இஸ்லாமிய, ஏகத்துவ சிந்தனைகள், விரலில் மைவைத்து ஜக்காத் விநியோகித்தது, உள்ளூர் மாணவர்களிடம் கல்லூரியில் டொனேசன் வசூலித்த விவகாரங்கள், தெருப்பாகுபாடு, செயலற்ற பேரூராட்சி நிர்வாகம், வரி வசூலிப்பில் அதன் அடாவடிகள், கொசுத்தொல்லை, சாக்கடை கால்வாய் பிரச்சினைகள், சுகாதாரப் பிரச்சினைகள், காலனி சம்பவத்தில் போலீசாரின் அராஜகங்கள், மனித உரிமை மீறல்கள், அல் அமீன் பள்ளி விவகாரம், என நாம் நுழையாத பிரிவுகளே இல்லை எனும் அளவில் உள்ளூர் செய்திகளையும், நிகழ்வுகளையும் வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு செய்திகளாகவும், கட்டுரைகளாகவும், வீடியோ, புகைப்படங்களாகவும், நம்மால் இயன்ற அளவு பங்களித்ததை நினைத்து திருப்திகொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்... பத்துபைசா ஆதாயம் இன்றி ஊடக ஆர்வத்திலும், நல்லெண்ணத்திலும் ஆண்டுக்கணக்கில் நாம் செய்த மேற்கண்ட செயல்களை அதிரையைச் சேர்ந்தவர்கள் நன்கு அறிவர்.

சிங்கம் தனியாத்தான் வரும் என்று நகைச்சுவையாக சொல்வது போன்று முறையான ஊடகப் பயிற்சி இல்லாமலும் சட்டப்பாதுகாப்பின்றியும் பல்வேறு தருணங்களில் தனியாகவே சிற்சில பிரச்சினைகளை சந்திக்கவேண்டியிருந்தது. அரசியல் கட்டுரைகளை பலவற்றை எழுதியிருந்தபோதும் எப்பொழுதும் அல்லாஹ் ஒருவனே துணை. (கல்லூரியில் பயிலும் காலத்தில் எழுதிய ஒரு கட்டுரைக்கு பேராசிரியர் ஒருவரின் எச்சரிக்கை இன்னும் நினைவில் உள்ளது. நீங்க ரோட்டில் நடந்து கொண்டிருக்கிறீர்கள் ஒரு லாரி உங்களுக்காக காத்திருக்கும் திடீரென விபத்து ஏற்படுத்தப்பட்டு கொல்லப்படுவீர்கள். அது விபத்தாகத்தான் பார்க்கப்படும் என்று எச்சரித்திருந்தார்)

அரசியல் விழிப்புணர்வு பெற்று கல்வி, வேலைவாய்ப்பு, பொது சுகாதாரம், மார்க்க விழிப்புணர்வுகளை சமுதாயம் பெற்று ஏற்றம் பெறவேண்டும் என்கிற நோக்கில் நமது செய்திகளிலும், கட்டுரைகளிலும் நம்முடன் பல்வேறு வகையில் பலர் உறுதுணையாக, பின்புலமாக, ஆலோசகர்களாக இருந்திருக்கின்றனர். ஜஸாகல்லாஹ்

நிற்க,

கடந்த சட்டமன்றத் தேர்தலில், தற்போதைய அதிரை பிபிசி குழுவினர் நமது சட்டமன்ற உறுப்பினரிடம் எவற்றை எதிர்நோக்கியுள்ளனர், பூர்த்தி செய்யப்படாத உள்ளூர் தேவைகள் எவைஎவை என்று அதிரை, சென்னையில் வசிப்பவர்களிடம் பேட்டிகள் எடுத்ததோடல்லாமல், சமூதாயத் தலைவர்களையும் சந்தித்து அவர்களின் பேட்டிகளை எடுத்ததும் அவை உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் கண்டுகளித்து உற்சாகமளித்ததையும் வாசகர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். அப்படியொரு முயற்சியை முதன் முதலில் முயற்சித்து மிகப்பெரிய வெற்றியும் கண்டது தான் தற்போதைய நமது அதிரை பிபிசி அணி.

கடந்த சட்டமன்றத்தேர்தலில் தமுமுக, SDPI, முஸ்லிம் லீக் கட்சிகளின் தலைவர்களை பேட்டி கண்டதும் நமது அணியின் ஊடக ஆர்வத்தையும், தொழில்நுட்ப அறிவையும் பலருக்கு அறியச்செய்தது. நமது ஆர்வத்தையும், தொழில்நுட்பங்களையும் கண்டு ஊடகங்களில் அனுபவமிக்கவர்களே மூக்கில் விரல் வைக்கும் அளவில் சிறப்புற செயலாற்றினோம். சென்னையில் வசிக்கும் நமதூர் முக்கியப் பிரமுகர்கள், இளைஞர்கள், வெளிநாட்டு நண்பர்கள் என ஒரு பெரும் பட்டாளமே நமது புது முயற்சிகளுக்கு பாராட்டு மழையைப் பொழிந்தனர். மாஷா அல்லாஹ்... அதன் தொடர்ச்சியாகவும், அனுபவ அடிப்படையிலும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்ளாட்சித் தேர்தலையும் அதே அணி அதிரைபிபிசி வாசகர்களாகிய உங்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறது.

நமது அணி மூலம் பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கைகளே கடந்த தேர்தலில் வேட்பாளர்களின் தேர்தல் வாக்குறுதிகளாக இருந்தன. குறிப்பாக சிஎம்பி கால்வாய் பிரச்சினை, விளையாட்டுத் திடல், 108 ஆம்புலன்ஸ், அல் அமீன் பள்ளிக்கு சுமூக தீர்வு போன்றவை. (அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதும், அவற்றை மைக்கில் நீட்டி முழங்கியவர்கள் மென்று முழுங்கியதுடன் தற்போது சேர்மன் போன்ற பதவிகளில் வேட்பாளர்களாக வலம் வருகின்றனர் என்பதும் வேறு விசயம்)

வரும் நாட்களில் பேரூராட்சி சேர்மன் வேட்பாளர்கள், வார்டு வேட்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் பேட்டிஎடுத்து வெளியிட இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.

நமதூரில் பொதுசுகாதாரம் மிகவும் அதளபாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. கூவம் நதி ஓடும் சென்னையைவிட கொசுக்கள் அதிகம் நிறைந்த ஊராக உள்ளது. கொசுவின் அளவு கூட நமதூரில் பெரிது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன் சென்னையில் மட்டுமே பிரசித்திபெற்ற நோய்களான மலேரியா முதல் டெங்கு காய்ச்சல் வரை ஊரில் சர்வ சாதாரண நோயாகிவிட்டது. குளங்கள் தூர்க்கப்பட்டு உள்ளூர் கலர் வேட்டி கரைகளின் நகரச்செயலாளர்களின் மாளிகைகளாக மாறிவிட்டன. இருக்கும் குளங்களில் சாக்கடையையும் , குப்பைகளையும் போட்டு நிலத்தடி நீரை மாசுபடுத்த அரசியல் கட்சிகளின் அதிகாரிகள் எனும் போர்வையில் உள்ள எடுபிடிகளால் திட்டம் தீட்டப்பட்டு தலைமுறை கடந்து அறுவடைக்கு தயாராகிவிட்டது.

மகரமல்லாத ஆண்களுடன் வெளியில் செல்லாதீர்கள் என்று இஸ்லாம் வழியுறுத்துகிறது. ஆனால் உரிமையுடன் வீட்டுக்கே சென்று சேவை செய்பவர் என்கிற தொனியில் சேவையாளர்களாக சித்தரிக்கப்பட்டு கட்சி சாயத்துடன் உறுப்பினர்களாக இருந்து வேட்பாளர்களாக வலம் வருகின்றனர்.

எண்ணூறு ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அறிமுகப்படுத்திய உள்ளாட்சி அமைப்புகளில் உண்மையான முஸ்லிம் - முஃமின் பிரதிநிதித்துவம் நிலைநாட்டப்படவேண்டும். அதற்கு சரியான தருணம் இதுதான். அடுத்த ஐந்தாண்டுகளுக்காக வருகிற பத்து நாட்களுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம். சமுதாயத்திற்காகவும், நமதூர் சுகாதாரத்திற்காகவும் நாம் செய்யும் சொற்ப தியாகம் - நல்லவர்களையும் வல்லவர்களையும் தேர்ந்தெடுப்பதே.

அதிரை பிபிசி குழு

7 பின்னூட்டங்கள்:

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Weldon adiraibbc team

abdulkader said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

your is team fantastic

Mohamed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

dubai il nadandha podhukula video eppo veliyahum

m.nainathambi.அபூஇப்ராஹீம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//ஊடகப் பயிற்சி இல்லாமலும் சட்டப்பாதுகாப்பின்றியும் பல்வேறு தருணங்களில் தனியாகவே சிற்சில பிரச்சினைகளை சந்திக்கவேண்டியிருந்தது.//

இது ஒன்றும் அப்படி எழுதப்பட்டதாக தெரியவில்லை... அன்று இல்லாத நாட்களில் கற்ற பாடமும், அனுபவமும் இன்று ஒரு நல்ல உள்ளூர் ஊடகமாக உருவெடுத்ததன் பலனை எழுத்தின் முதிர்சியில் காணப்படுகிறது !

நன்முயற்சிகள் என்றும் நட்டாற்றில் விடப்படமாட்டாது !

தொடரட்டும் ! வாழ்த்துக்கள் !

எழுத்தின் பின்னனி சொல்லாமல் சொல்லும் விஷயங்கள் ஏராளம் !

அப்துல்மாலிக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உங்க பங்களிப்பு மிகச்சிறந்தது..மேலும் மக்களிடையே அதிக விளிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்யவும்

என் வாழ்த்துக்களும், துஆவும்..

adirai.in said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்ஹம்துல்லாஹ் எங்களது நண்பர்கள் மேலும் சேவைகள் தொடர அதிரை.இன் சார்பாக வாழ்த்துகள் இன்ஷால்லாஹ் அதிரை.இன் னும் உங்களுடன் கை கோர்த்து நிற்கும்.

Irfan s/o (Japan) Sheikh Abdul Cader said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Adirai BBC blogspot services are excellent. I wish them success in every walk of their life.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.