பரபரப்பாக நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அதிரை பேரூராட்சி மன்றத்திற்கான தலைவர் தேர்தல் முடிவுகள் அதிரை பி.பி.சி.யின் ஆன்லைன் கணிப்பு எடுத்துக்காட்டிய படியே அமைந்தது.
அதிரை பிபிசி அனைத்து தெருக்களின் மக்கள் மனம் கவர்ந்த உள்ளூர் வலைத்தளமாக உருவெடுத்து வெற்றி நடைபோட்டு வருவதால், அதன் செயல்பாடுகள் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் அதிரை மக்கள். அவர்களின் நம்பிக்கைக்கு எவ்வகையிலும் மாற்றமாக நடந்திடாமல் அவர்களின் உள்ளுணர்வலைகளை நன்கறிந்தே செயல்படுகிறோம்.
சமீபத்தில் தேர்தலுக்கு முன்னர் வெளியிட்ட அதிரை பிபிசி வெளியிட்ட பேரூராட்சித் தலைவர் கருத்துக் கணிப்பு தெளிவாக சுட்டிக் காட்டியிருந்த வெற்றியாளர்தான் இன்றைய பேரூராட்சித் தலைவர் S.H.அஸ்லம் அவர்கள். அன்றே அறியப்பட்ட கருத்துக் கணிப்பின் பின்னனிக் காரணங்கள் தெளிவே,புதியவர், துடிப்பானவர், பதவிகள் வரும் முன்னரே பாதைகளை சுத்தம் செய்தவர் என்று எல்லோராலும் போற்றப்பட்டவர்.
தகுதியானவர் என்று மக்களின் பெரும்பான்மை நிருபித்திருக்கிறது அதற்கு முன்னோடியாக அதிரை பிபிசி யின் கருத்துக் கணிப்பும் அமைந்தது முன்னோட்டமாக உணரப்பட்டது.
வெற்றியாளர்கள் அனைவருக்கும் அதிரை பிபிசியின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
2 பின்னூட்டங்கள்:
அஸ்ஸலாமு அழைக்கும்
அதிரை பிபிசி எனது இந்த பின்னூட்டத்தை வெளியிடும் என்று நம்பி எழுதுகிறேன்
சகோதரர் அஸ்லாம் வென்ற பின் அதிரை பி பி சியின் கணிப்பு சரியே என்று பின்னூட்டமிட்டுள்ளீர்கள்.
இதற்கும் முன் அபுபைஜ் என்ற பெயரில் இந்த வலைத்தள நிர்வாகி ஒருவரே அதிரை வாக்காளர்களுக்கு அபு பைஜின் அவசர வேண்டுகோள் என்ற தலைப்பில் அதிமுக வேட்பாளரை காரண காரியமின்றி புகழ்ந்து, அஸ்லாம் அவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது என்றும் அஜீசுக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் எழுதியிருந்தார். அதற்க்கு நான் இட்டிருந்த பின்னூட்டத்தையும் வெளியிடவில்லை.
மேலும் காக்கையார் என்ற பெயரில் அதே நிர்வாகி, அஸ்லாம் சிங்கபூர் சென்றுவிடுவார், ஆளப்போவது குணசேகரன்தான் என்றும், மேலும் போட்டி அதிமுகவிற்கும், கான்கிரசுக்கும்தான் என்றும் கதை விட்டுவிட்டு, இன்று, தனது கணிப்பு சரிதான் என்று எழுதுவது நகைப்பிக்கிடமாக உள்ளது.
தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாக ஒருபக்க -சார்பாக இதுவரை செயல்பட்டு வந்த அதிரை பி.பி.சி, இனியாவது தனது போக்கை மாற்றிக்கொண்டும், நேர்மையாக நடக்கும் என எதிரிபார்கிறோம்.
இந்த பின்னூட்டத்தை வெளியிட்டு தமது நேர்மையை நிரூபித்தால் அதிரை பிபிசி வலைத்தளம் நிச்சயம் மிகப்பெரும் வரவேற்ப்பை பெரும் என நம்புவோம்.
இன்ஷா அல்லாஹ்
சகோ. நிஜாரின் பின்னூட்டம் தொடர்பான எனது கருத்தை பின்வரும் சுட்டியில் பதிந்துள்ளேன்.
http://adiraibbc.blogspot.com/2011/10/blog-post_23.html
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment