எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருதவியால் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த 20 நாட்ளுக்கு மேலாக எங்களின் வேலைப்பளுகளுக்கிடையே கடின உழைப்பை மேற்கொண்டு அதிரை பிபிசியின் நிர்வாக பங்களிப்பாளர்கள் உடனுக்குடன் அதிரையில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் பேட்டிகள் அனைத்தையும் செய்திகளாகவும்,காணொளிகளாகவும் புகைப்படங்களாகவும் மிகச் சிறப்பாக வழங்கினோம்,அல்ஹம்துலில்லாஹ் !
இது ஒரு மாபெரும் இனையவழி ஊடக புரட்சியென்றால் அது மிகையாகாது. தேர்தல் முடிவுவை அறிய இன்று (21-அக்டோபர்-2011) ஏற்பாடு செய்யப்பட்ட நேரலை மாபெரும் வெற்றி மட்டுமல்ல இது அதிரை பிபிசியின் தனித் தன்மையை பறைசாற்றியது அல்ஹம்துலில்லாஹ் !. இன்று மட்டும் நேரலையை இதுவரை அதிரை பிபிசியில் கண்டும் கருத்துப் பரிமாற்றமும் செய்தவர்கள் மட்டும் 2600 இணைய வாசகர்கள்.
அதிரை பிபிசியின் பங்களிப்பாளர்களுக்கும் சற்று ஓய்வு தேவைதானே என்று நீங்கள் நினைக்க கூடும், ஆம் ! அதனையே நாங்களும் சொல்ல வருகிறோம். ஆதலால் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆக இரண்டு நாட்களுக்கு அதிரைபிபிசி தளம் அமைதியாக இருக்கும் அதே நேரத்தில் அவசியமான பதிவுகள் உடனுக்குடன் தலைகாட்டிடும் இன்ஷா அல்லாஹ்..!
அமைதி காத்திடுவதனால் வாசகர்களாகிய உங்களின் வருகை தொடர்ந்திருக்கும் இவ்வேளையில் இந்த தகவலை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம் .
இப்படிக்கு,
அதிரைபிபிசி குழு
18 பின்னூட்டங்கள்:
Well we had a chance to hear the election result before it reaches Adirampattinam.
ZAKIR HUSSAIN
Malaysia
அற்புதமான பணிகள் செய்திருக்கிறீர்கள்... அதிரை இணைய வரலாற்றிலேயே சகாப்தம் தான் நேற்றைய நிகழ்வுகள் அனைத்தும் வேட்பாளார்களின் நெருங்கியவர்களுக்கு தெரியும் முன்னரே எங்களுக்கு உடனுக்குடன் நேரலை, செய்ததையும் எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் தனிக்கை செய்து லைவ் சாட்டிங்கை கையாண்ட விதமும் வெல்டன் !
வாழ்த்துக்கள் ! கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கப்பா ! :)
அஸ்ஸலாமு அலைக்கும்
ஒவ்வொரு வலைத்தளங்களும் பதிவிடுவதற்கு சிலநேரங்களில் நேரம் இன்மையால் ஒருநாள் இரண்டுநாட்கள் கழித்து பதிவிடுவதும் ஏன் ஒரு வாரம் கூட இடைவெளிவிடுவார்கள்.
இதற்க்கு அறிவிப்பு வெளியிடுவதுதான் சந்தேகத்திர்க்கிடமாக உள்ளது.
அஸ்லம் அவர்களது வெற்றி உறுதியானவுடன், பின்னூட்டம் நிறுத்தப்பட்டது மட்டுமல்லாமல் அதிரை பிபிசி யின் பதிவுகளும் நிறுத்தப்பட்டதை பார்க்கும்போது,
அஸ்லத்தின் வெற்றியை ஜீரணிக்க இரண்டு நாட்கள் உங்களுக்கு தேவைப்படுகிறது என்பதே உண்மை..
இதை வெளியிடமாட்டீர்கள் என்று தெரியும்..நண்பர்களுக்கு அனுப்பிவைத்துவிட்டேன்..
//அஸ்லம் அவர்களது வெற்றி உறுதியானவுடன், பின்னூட்டம் நிறுத்தப்பட்டது மட்டுமல்லாமல்//
ஜும்மா நேரத்தில் நிறுத்தாமல் என்ன செய்வதாம்.
//அஸ்லத்தின் வெற்றியை ஜீரணிக்க இரண்டு நாட்கள் உங்களுக்கு தேவைப்படுகிறது என்பதே உண்மை..//
நகைச்சுவையாக பேசுவீர்கள் எனபது தெரியும். அதுக்காக இப்படியா?
கடந்த சில நாட்களாக வேட்பாளர்கள் அநேகர்களை பேட்டி எடுத்து பதிந்துல்லோம். அவற்றின் பின் உழைப்பை நீங்கள் அறிந்திருந்தால் இவ்வாறு சொல்லியிருக்க மாட்டீர்கள்.
யார் ஆட்சிக்கு வந்தாலும் அதிரை பிபிசி தனித்தன்மையுடன் பீடு நடை போடும்.
அதிரை பிபிசி
//அஸ்லம் அவர்களது வெற்றி உறுதியானவுடன், பின்னூட்டம் நிறுத்தப்பட்டது மட்டுமல்லாமல்//
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர், "அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும், மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
Allah says to our Prophet Muhammed, to advice the People.
AdiraiBBC Muhammed should remind adiravaasi abt the foresaid Verses
Ahamed Aslam
Dubai
நண்பர் நிஜாரின் கருத்திலுருக்கும் உள்ளர்த்தம் சொல்வதுபோல் அதிரை பிபிசி நடந்து கொண்டதாக எனக்குத் தெரியவில்லை, பேரூராட்சித் தலைவர் வாக்கு முடிவுகள் அறிவித்த பின்னர்தான் லைவ் சாட்டிங்கில் இருந்த சகோதரர்கள் அடிக்கடி ஞாபகப் படுத்தியது இன்று ஜும்மாவுடைய நாள் அதனைக் கருத்தில் கொண்டே அவர்களும் நிறைவுக்கு கொண்டு வந்தனர் (அவர்கள் அனைவரின் உழைப்பு மெச்சத் தக்கதே)..
நிச்சயமாக உள்ளர்த்தம் ஏதும் இருந்திருக்க வாய்ப்பில்லை, வெற்றி பெற்ற அஸ்லம அவர்களே யார் மீதும் காழ்புணர்ச்சி இல்லை என்று சொல்லியிருக்கும்போது நாம் ஏன் இதனை கிளற வேண்டும் !
ஏற்கனவே இங்கே ஒரு பதிவு வந்தது என்னவோ அது தனிப்பட்டவரின் கருத்தாகத்தான் பதியப்பட்டதே அன்றி அதிரைபிபிசியின் கருத்தாக அவர்கள் சொல்லவில்லையே !
பெருந்தண்மையக் காட்டக்கூடியவர்கள் நாம் ! அப்படியே நடந்திடுவோம் நண்பா !
சகோ நிஜார் அவர்களே எந்த ஒரு ஆதாயமும் இல்லாமல் நம் மக்கள் நமது ஊர் தேர்தல் செய்தி கொடுக்க அறிய பாடுபட்ட சகோதர்களை வாழ்த்த மனம் வராவிட்டால் தூற்றாமல் இருக்கலாமே நீங்களும் ஒரு பத்திரிகை ஆசிரியர்தானே உணர்வீர்கள் என்று நம்புகிறேன். அன்பு அதிரை BBC நண்பர்களே பொது வாழ்வில் இதல்லாம் சகஜம் இதை மோடிவ் ஆக எடுத்துக்கொள்ளுங்கள் உங்கள் பணிகள் மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ் துணை நிற்பான்.
அஸ்ஸலாமு அலைக்கும்
முதலில் எனது பின்னூட்டத்தை வெளியிட்டதற்கும், அதற்க்கு பதிலளித்தர்க்கும் மிக்க நன்றி..
//அஸ்லம் அவர்களது வெற்றி உறுதியானவுடன், பின்னூட்டம் நிறுத்தப்பட்டது மட்டுமல்லாமல்//
ஜும்மா நேரத்தில் நிறுத்தாமல் என்ன செய்வதாம். //
நமதூர் இணையதள வாசகர்கள் பெரும்பாலும் அயல்நாட்டில் வசிப்பதால் ஜூம் ஆ நேரம் நிச்சயம் மாறுபடும். அதுமட்டுமில்லாமல், பின்னூட்டமிடும் வாசகர்களும், அல்லாஹ்விற்கு பயந்தவர்களே, ஜூம் ஆவிற்கு போகக்கூடியவர்களே. எனவே அவர்களே அந்த நேரத்தில் பின்னூட்டமிடுவதை நிறுத்திவிடுவார்கள். எனவே நீங்களாகவே அதை நிறுத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என்பதே என் கருத்து.
//ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர், "அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும், மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. //
துபாயை சேர்ந்த சகோதரர் அஹமத் அஸ்லாம் என்பவரின் இந்த பின்னூட்டமும் உங்களது பின்னூடமும் ஏதோ நான் ஜூம் ஆவை புறக்கணிப்பவன் எனபது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்ச்சிப்பது போலவும் இருக்கிறது.
நண்பர் அபூ இபுராஹீம் 16/10/2011 "அதிரையின் தற்போதய நிலவரம் - சேதி சொல்லும் பிபிசி காக்கையார்" என்ற தலைப்பில் வெளியான பதிவையும்,
17/10/2011 அன்று வெளியான "அதிரை பொதுமக்களுக்கு அபுபைஜின் அன்பான அவசர வேண்டுகோள்" என்ற தலைப்பில் வெளியான பதிவையும் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் இது இரண்டு பதிவையும் எழுதிய நண்பர் அதிரை பிபிசியின் நிர்வாகிகளுள் ஒருவர் என்று என்னால் அடித்து சொல்லமுடியும்.
அதுபோக -வார்டு 1 இல் போட்டியிட்ட உதயகுமார் என்பவரை பேட்டி எடுத்ததின் உள்நோக்கம் அஸ்லம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே அல்லாமல் வேறு என்ன நினைக்க முடியும்?
காரணம் எந்த காரணத்திற்க்காக குணசேகரனை நீங்கள் வெறுக்கிரீர்களோ அதைவிட பலமான காரணம் உண்டு உதயகுமாரை எதிர்பதற்கு. பிஜேபி மதவாத கட்சியில் இருந்து அதிராம்பட்டினத்தில் தன வேலையை காட்டமுடியாது என்ற காரணத்தினால் அதன் மற்றொரு பிரிவான அதிமுகவில் அவர் இணைந்திருக்கிறார். அவர்களின் பேட்டி அவசியமற்ற ஒன்று.
18/10/2011 அன்று வெளியான "அதிரையில் மோடி (மோசடி) பரபரப்பு", "சங்க முகவரியை தவறாக பயன்படுத்தும் போட்டி வேட்பாளர்" போன்ற கட்டுரைகளை படித்தாலும் இவரகளது நிலைப்பாட்டை தெரிந்து கொள்ளலாம்.
அதுமட்டுமில்லாமல், திமுக வேட்பாளர் அஸ்லம் அவர்களின் இறுதிக்கட்ட பிரச்சார காணொளியை முதலில் வெளியிட்டு விட்டு, அதற்க்கு முந்தய தினம் அதிமுக வேட்பாளர் அஜீஸின் தனிமனித விமர்சனம் செய்து பேசிய காணொளியை அதற்கு பிறகு வெளியிட்ட தந்திரமும் தெரிந்தால் நண்பர் அபூ இபுராஹீம் இப்படி எழுதி இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.
நாடு நிலைமை எனபது போலித்தனம். ஒரு பக்க சார்பாகவே இருப்பதுதான் சரி எனபது கூட என் வாதம்தான். ஆனால் அந்த ஒரு பக்க சார்பு எனபது எது ஊருக்கு நன்மை என்பதை வைத்துதான் இருக்க வேண்டுமே தவிர நமது சொந்த விருப்பு வெறுப்புக்காக பயன்படுத்தக்கூடாது என்பதும் என் வாதம்தான். அதுவும் பல்வேறு தரப்பு மக்கள் ஒரு நம்பிக்கையோடு பார்க்கப்படும் இனைய தளங்கள் இவ்வாறு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற சமூககவலையின் காரணமாகவே நான் உங்களை விமர்சிக்கிறேன் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
மிகவும் நன்றி.
அல்லாஹ் போதுமானவன்
வஸ்ஸலாம்
சகோ. நிஜார் அவர்களே,
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், அவர்கள் ஜும்மா நேரத்தில் பின்னூட்டத்தை நிறுத்தாவிடில், அந்த நேரத்தில் யார் அதை மட்டுறுத்தம் செய்வது. நீங்கள் பார்த்திருப்பீர்கள் வெள்ளியன்று சகோ. மொய்னுத்தீன் திரும்ப, திரும்ப ஒரு வாசகத்தை பதிவு செய்தார் "பின்னூட்டத்தில் தயவுசெய்து தனி நபர் தாக்குதல் வேண்டாம், தொடர்ந்து செய்திகளை பதிவதால் மட்டுறுத்தம் செய்ய நேரமில்லை"
எனவே அது சமயம் நிறுத்தியதன் காரணத்தை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
Please encourage them, they are young boys who made Incredible revolution in Adirai Media.
In this world nothing is free, everything has its own cost, but these guys didn’t count their costs, their time, their efforts and so on. We are just sitting and watching their news feedings because of their efforts.
Please appreciate their service and encourage them. If there is any shortcomings from them (of course they are also human beings), please let them know in a way they can understand. Do not criticize by putting unjustified blames on them.
Thanks Br. Nizar, I hope you will understand my comments.
//அதுவும் பல்வேறு தரப்பு மக்கள் ஒரு நம்பிக்கையோடு பார்க்கப்படும் இனையதளங்கள் இவ்வாறு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற சமூககவலையின் காரணமாகவே நான் உங்களை விமர்சிக்கிறேன் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.//
அல்ஹம்துலில்லாஹ், நல்லெண்ண நோக்கில் எடுத்து வைக்கப்படும் எந்த ஒரு விமர்சனமும் ஆரோக்கியமே அதே நோக்கில் சமுதாய நலன் கருதி வைத்த விமர்சனமாக இதனை அதிரை பிபிசி கருதிக் கொண்டு... தொடருந்திடுங்கள்... இன்ஷா அல்லாஹ் !
//A.J. Thajudeen said...
சகோ. நிஜார் அவர்களே,
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், அவர்கள் ஜும்மா நேரத்தில் பின்னூட்டத்தை நிறுத்தாவிடில், அந்த நேரத்தில் யார் அதை மட்டுறுத்தம் செய்வது. நீங்கள் பார்த்திருப்பீர்கள் வெள்ளியன்று சகோ. மொய்னுத்தீன் திரும்ப, திரும்ப ஒரு வாசகத்தை பதிவு செய்தார் "பின்னூட்டத்தில் தயவுசெய்து தனி நபர் தாக்குதல் வேண்டாம், தொடர்ந்து செய்திகளை பதிவதால் மட்டுறுத்தம் செய்ய நேரமில்லை"
எனவே அது சமயம் நிறுத்தியதன் காரணத்தை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.//
அஸ்ஸலாமு அலைக்கும்
யாரும் மிக மோசமான பின்நூட்டமிடப்போவதில்லை.. ஏனெனில் பின்னூட்டமிடும் சகோதரர்களும் இறைவனுக்கு பயந்தவர்களே - அப்படி அவர்கள் பதிவிட்டாலும் நமது சகோதரர்கள் அவர்களுக்கு மறுப்பு தெரிவித்து விடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் குறிப்பிட்ட கட்சிக்கு சார்பான பதிவுகளை போட்டுவிட்டு, இது வலைத்தளத்தின் கருத்தல்ல , பதிவிட்டவரின் கருத்து என்று தப்பித்துக்கொள்ளும்போது, பின்னூட்டத்திற்கு மட்டும் எப்படி அந்த வலைத்தளம் பொறுப்பேற்க முடியும்?
மேலும் நான் இளைஞர்களை குறை கூறுவதாகவும் கூறியுள்ளீர்கள்.
அவர்களது செயல்பாடுகளை சுட்டிக்காட்டி திருத்திகொள்ளதான் சொல்கிறேன் .. இந்த நிர்வாகிகளை எனக்கு தெரிந்தவர்கள்தான் என்றாலும் இவர்களுடன் என்றைக்கும் நான் தொடர்பில் இருந்ததில்லை. ஆனால் இவர்களிடும் செய்திகளுக்கெல்லாம் நிறையபேர் என்னிடம் போன் செய்து புகார் செய்யும்போது, இவர்களை நான் ஒன்றும் சொல்லமுடியாது என்றே தவிர்த்து வந்தேன். ஆனாலும் சில கட்டுரைகளை படித்து பார்த்த பின்பு இவர்களின் நோக்கம் புரிந்தே பின்னூட்டமிட்டு வருகிறேன்.
இதை ஒவ்வொருவரும் தவறாகவே புரிந்து கொண்டிருப்பதால் பின்னூடத்தை இத்துடன் நிறுத்தி விடுகிறேன்
நன்றி.
சகோ. நிஜார் அவர்களே, தாங்கள் அதிரைபிபிசியை நடுநிலையாக விமர்சிப்பவராக கருதுமாயின், தங்கள் மனதைத்தொட்டு அல்லாஹ்வை சாட்சியாலனாக முன்னிறுத்தி சொல்லுங்கள் அவர்கள் செய்த சேவைகளை மற்றும் குறைகளை!, நாங்களும் அறிந்துகொள்ளகிறோம்.!
ஏன் இதை கூருகிறேன் என்றால், அவர்களின் நேற்றைய தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேரலையை பார்த்து வியந்தவன் என்ற முறையிலும், தாங்களும் அதை கண்டு / கேட்டு பயனடைந்த நூற்றுக்கணக்கான அதிரை மக்களின் ஒருவராய் இருப்பிர்கள் என்ற எண்ணத்திலும்தான் இதை தங்களிடம் கேட்கிறேன்.
(தயவு செய்து குறைகளை மட்டுமே எழுதாதீர்கள் அவர்களின் நல்ல சேவைகள் இருந்தால் அவைகளையும் சுட்டிக்காட்டி தங்களின் நடுநிலையான விமர்சங்களை எங்களைப்போன்று வாசகர்களுக்கு தந்திடுங்கள்.)
அல்லாஹ் உங்களூக்கு அருள்புரியட்டும்மாக!!
சாதக பாதக விமர்சனங்கள் அனைத்துமே(சுய பரிசோதனை) வெற்றிக்கான முன்னேற்றப்படிகளே!
BBC யின் சேவைகள் நவீன காலத்தின் உன்னதமான பணிகள்.
தளரத்தேவையில்லை.தனிச்சிறப்புத் தன்மை அடையட்டும்.
சரி விடுங்கப்பா... அரசியலில் இதெல்லாம் சகஜம்.. அரசியல் நம்மை பிரித்துவிடக்கூடாது, நாமெல்லாம் ஒரே சஹனில் அமர்ந்து சாப்பிட வேண்டியிருக்கிறது.
தம்பி நிஜார் எதையும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறாகதான் தெரியும். உங்களின் வெள்ளி நிலா பத்திரிக்கை பார்த்த எனக்கு, நீங்கள் ஒரு சாராரை ஆதரிப்பது போல் தோன்றியது. உங்களிடம் நேரில் கேட்டு அது சம்பந்தப்பட்டவர் கொடுத்த விளம்பரம் என்று கூறியதன் மூலம் தெரிந்துகொண்டேன்.அதுபோல் விளக்கம் பெற்று கொள்வ்தைவிட்டு, பொது வலைதளத்தில் போட்டு தாக்கி நம் இளம் சகோதரர்களின் ஆர்வத்தை குறைக்க செய்யக்கூடாது என்பது என் கருத்து.
அன்புடன்
மு.கி.அபுபக்கர்
சஹாபாக்களுக்கு மத்தியிலும் ஒரு விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கத்தான் செய்தன. ஆனால் அவைகள் அவர்களைத் துண்டாடவுமில்லை, பிரிவினைக்கு அப்புனிதர்கள் இடம் கொடுக்கவுமில்லை. அதேவேளை அவர்களால் ஒற்றுமையை எவ்வாறு கட்டிக்காக்க முடிந்தது என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். உண்மையில் அவர்களிடத்தில் இருந்த மனத்தூய்மை, பரஸ்பரப் புரிந்துணர்வு, ஒற்றுமைக்காக ஓயாது செயற்பட்டமை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, எந்த ஒன்றையும் நிதானமாகவும், ஆழமாகவும் அனுகிய விதம் போன்ற பன்புகள் தான் கடைசி வரைக்கும் ஒரே கப்பலில் பயணிக்கச் செய்தது .
அஸ்ஸலாமு அலைக்கும்
நம் அதிரை பிபிசி சகோதரர்கள் தேர்தல் செய்திகளை நேரலை செய்யும்போது வாழ்த்து தெரிவித்தவன் நான்.
அது அவர்களுக்கும் தெரியும்
ஆனால் ஒரே புகழ்ந்துகொண்டே இருந்தால் அவர்கள் அறியாமல் செய்யும் தவறுகள் அறிந்து கொள்ளப்படாமலேயே போய் விடும்.
எனவே அவர்களது குறைகளை சொல்ல வேண்டாமா?
தற்போது தேர்தலில் தோற்று போனவர்களது குறைகளை கூட உள்ளவர்கள் சொல்லிக்காட்டாமல் போனதால்தான் - அதாவது அவரது மோசமான வார்த்தை பிரயோகங்களைகூட, மனதில் உள்ளவற்றை மறைக்காமல் சொல்லிவிடுவார் என்று புகழ்ந்தது கூட, தோல்விக்கு காரணம் என்று சொல்லலாம்.
குறையே சொல்லக்கூடாது என்று சொல்கிறீர்கள்..
Dear Nizar Assalamu Alaikum ww,
We do agree some of your valuable comment and being witness for your comment appreciating BBC for their effort during live chat. but let us stop blaming and arguing within ourself which may lead to un-solvable misinterpretation.
Let us all appreciate "Adirai BBC" for their remarkable achievement by broadcasting(Live) the election result from Peravoorani, I dont think any of other village has these kind of Blogs (Hats off to Adirai BBC Team Members)
Am requesting you and all other viewers,not to criticise hereafter to end this episode for the benefit of Adirai Unity.
Hope and request Adirai BBC to consider all the conversation on right sprit and correct in the future (If anything).
Once again congrats to Adirai Xpress, Adirai BBC, Adirai.in & Entire Team Members.
"BE UNITED"
Wassalam!!!
K.Shafeeq Ahamed
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment