அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, October 29, 2011

தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் வேண்டுகோள்..

எல்லா புகழும் இறைவனுக்கே உங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்( வரஹ்)

நமதூரில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 25.10.2011 அன்று புதிதாக பதவியேற்றிருக்கும் பேரூராட்சி தலைவர் சகோதரர் S.H.அஸ்லம் அவர்களுக்கும் மற்றும் 21 வார்டுகளின் கவுன்சிலர்களாக பொறுப்பேற்று இருக்கும் அனைவருக்கும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் சார்பாக நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

ஒற்றுமை

நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியில் ஒருவருக்கொருவர் குற்றம் காணாமல் ஒற்றுமையுடன் ஊரின் நலனில் மட்டும் அக்கறை எடுத்துக் கொண்டு எல்லோரும் ஒற்றுமையுடன் சேர்ந்து செயல்பட்டு விட்டுகொடுக்கும் மனப்பான்மையை இனிமேலாவது அதிகரிக்கச் செய்து நமது ஊரின் நலனுக்காக மட்டும் அனைவரும் சேர்ந்து செயலாற்றிட வேண்டுகிறோம். ஊரின் நன்மை மட்டும் கருதி அதிக அக்கறை செலுத்த வேண்டிக்கொள்கிறோம்.

மருத்துவம்

நமது அரசு மருத்துவமனைக்கு நிரந்தர அறுவை சிகிச்சை நிபுணர்இ மகப்பேறு மருத்துவர், ஜெனரல் மருத்துவர், சேவை திறன்மிக்க மருத்துவர்கள்இ நர்சுகள் ஆம்புலன்ஸ் வசதி, சுத்தமான சுகாதாரமான மருத்துவமனை, இவை நமது ஊருக்கு உடனடி தேவையாக உள்ளது இதற்கு பேரூராட்சிதலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள்இ பேரூராட்சி அரசு நிர்வாகிகள் ஒன்று இணைந்து செயல்பட்டு நமது ஊருக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகுமாறு கேட்டு கொள்கிறோம்.

சாலை வசதி

நமது ஊருக்கு மிக பெரிய தலைவலியாக இருப்பது ரோடு வசதி ரோடுகளை உடனே சரி செய்வதுஇ ரோடு இல்லாத இடங்களுக்கு உடன் ரோடு வசதி செய்து கொடுப்பது இனியாவது ரோடு ஒப்பந்தக்காரர்களை சரியான முறையில் தேர்ந்து எடுத்து கண்டிப்புடனும்இ காலவரைக்குள் செய்து முடிக்கும் ஒப்பந்த காரர்களை தேர்ந் தெடுக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

தூய்மையான குடிநீர்

நமது ஊரில் பெரும் பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சினையை உடனடியாக சீர்படுத்த வேண்டும் சில இடங்களில் குடிநீர் குழாயினுள் கழிவு நீர் கலந்து வருவது தாங்களும் நன்கு அறிவீர்கள் அவைகளை கண்டறிந்து அதை சரி செய்து மக்களுக்கு தூய்மையான குடிநீரை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

சாலைவிளக்கு

நமது ஊரின் எல்லா பகுதிகளுக்கும் சாலைவிளக்கு முறையாக அமைத்து கொடுக்க வேண்டும் எத்தனையோ தெருக்களில் சாலைவிளக்குகள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு கொண்டு உள்ளார்கள் தெரு பாகுபாடு இல்லாமல் மத வேறுபாடுகள் இல்லாமல் சாலைவிளக்கு விசயத்தில் மிக அக்கறை செலுத்த வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.

சுகாதாரம்

இந்த விசயத்தில் தான் அதிரை மிகவும் பின் தங்கியுள்ளது. இந்த விசயத்தில் நமதூர் பேரூராட்சி தலைவர் அவர்கள் மிகவும் அக்கறையாக உள்ளார் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும் குப்பைஇ பாதளசாக்கடை இவை இரண்டிலும் தலைவர் மட்டும் அல்ல 21வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் குறிப்பாக பெண்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாக உள்ளது முதலில் சுகாதரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் வார்டு தோறும் நடத்தப்படவேண்டுமென்றும் கேட்டு கொள்கிறோம்.

முக்கிய குறிப்பு

மற்ற ஊர்களை விட நம் ஊரில் அறுக்கப்படும் ஆடுகள் முறையாக பேரூராட்சியின் முத்திரையுடன் அறுக்கபட்டு வந்தது மற்ற ஊர்களில் உள்ளவர்கள் அதிரைக்கு சென்றால் நல்ல கறி கிடைக்கும் பெண் ஆடுகள் அறுக்கமாட்டார்கள் என்று நம்பி வாங்குவார்கள் ஆனால் இப்போது அது போன்று எதுவும் நடப்பதாக எங்களுக்கு தெரியவில்லை பெண் ஆடுகளையும் அறுக்க செய்கிறார்கள் அது மட்டும் அல்ல சீக்கு கொண்ட ஆடுகளையும் வாங்கி வரும் போது செத்து போகும் ஆடுகளையும் உடனடியாக அறுத்து அதையும் விற்பனை செய்து வருவதாக பரவலாக செய்திகள் வந்து கொண்டு உள்ளது. எனவே இந்த விசயத்தில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேரூராட்சி தாங்களின் சேவையை சரியாக செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம் அதிரையில் உள்ள அனைத்து கறி கடைகளிலும் பேரூராட்சியின் முத்திரை இல்லாத ஆடுகளை வாங்கவோ விற்கவோ கூடாது இதில் அதிக கவனம் செலுத்தி பொது மக்களின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் தனது இஸ்ட்டத்திற்க்கு கறியின் விலையை கூட்டுவதும் குறைப்பதுமாக உள்ளனர் நமக்கு அருகில் இருக்கும் மதுக்கூர் இ பட்டுக்கோட்டைஇ முத்துப்பேட்டை போன்ற ஊர்களை நாம் பார்க்கும் போது அதிரையில் விலை கடுமைதான் இந்த விசயத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

ஆட்டோ எந்த ஊரிலும் இல்லாத ஆட்டோ கட்டணம் நம்ம ஊரில் மட்டும் கடுமையாக உள்ளது இதனால் பொதுமக்கள் அனைவரும் மிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர் நமதூரில் இயங்கும் ஆட்டோக்கள் அனைத்திற்க்கும் மீட்டர்கள் பொருத்த வேண்டும் அல்லது ஒரு முறையான அதாவது யாருக்கும் பாதகம் இல்லாத வகையில் ஒரு கட்டணத்தை அமலுக்கு கொண்டு வரவேண்டும் இந்த விசயத்திலும் தலைவர் உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பத்திர பதிவு அலுவலகம் நமதூரில் செயல்பட்டுக் கொன்ரிருக்கும் பத்திர பதிவு அலுவலகம் நமதூரிலிருந்து மாற்றி தாமரங்கோட்டைக்கு கொண்டு செல்ல போவதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்திகள் வந்த வண்ணமாக உள்ளதுஏன் நமதூரை விட்டு தாமரங்கோட்டைக்கு போகவேண்டும்? 2ஆம் நம்பர் ஸ்கூலுக்கும் ஹாஜாமுகைதீன் டாக்டர் அவர்களின் மருத்துவமனைக்கு பின்புறத்தில் இருக்கும் குளம் தற்பொழுது நல்ல ஒரு மைதானமாக காட்சி அளிக்கிறது எனவே அந்த இடத்தில் நமதூர் பத்திர பதிவு அலுவலகம் கட்டினால் நன்றாக இருக்கும் எல்லோருக்கும் பொதுவான இடமும் கூட வாகனங்கள் நிறுத்துவதற்கும் நன்றாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம் எனவே பேரூராட்சி தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரிகள்இ அரசியல் கட்சி தலைவர்கள் இந்த விசயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஒற்றுமையுடன் செயல்பட்டு அரசிடமிருந்து இருந்து கிடைக்கும் சலுகைகள் அனைத்தையும் பெற்று அந்தந்த வார்டுகளில் முறையாக கொடுக்கவேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். தமிழகத்திலேயே ஒரு முன்மாதிரியான ஊராக அதிரையை தாங்கள் அனைவரும் மாற்றி காட்ட வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் இந்த விசயத்தில் பொது மக்களான நாமும் ஒத்துழைப்பு கொடுப்போம் என்ற ஒரு உறுதி மொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலத்தெருவில் அமைந்திருக்கும் வாட்டர் டேங்கில் 500000 லிட்டரும் பட்டுக்கோட்டை ரோட்டில் அமைந்திருக்கும் வாட்டர் டேங்கின் கொள்ளளவு 10,0000 லிட்டர் மொத்ததில் 15,0000 லட்சம் லிட்டர் தண்ணீர் இருந்தும் போதிய அளவில் தண்ணீர் வரதா காரணத்தால் பொது மக்கள் மிக சிரமத்திற்குள்ளாகிறார்கள் எனவே பொது மக்களின் நலனில் அக்கரை எடுத்துக்கொண்டு அதிரைக்கு இரண்டு நேரத்திற்க்கு அதாவது (காலை ரூ மாலை ) ஆகிய இரண்டு நேரங்களிலும் தண்ணீர் சப்ளை செய்யப்பட வேண்டும் எந்த ஊரிலும் இல்லாத தண்ணீர் வரி கட்டணம் ரூபாய் 50 அதிரை வாசிகள் செலுத்திவருகிறாகள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம் அதே சமயம் தோல்வி கண்ட அனைவரும் நாம் தோல்வி கண்டுவிட்டோம் என்று கருதாமல் தாங்கள் சமூதாயசேவையில் தொடர்ந்து செயல்பட்டு கொண்டு வரவும் உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் வாக்களிக்காத மக்களுக்கும் உங்கள் தொண்டை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டு வரவும் வெற்றி தோல்வி வீரனுக்கு அழகே
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

இப்படிக்கு
தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம்

1 பின்னூட்டங்கள்:

முஹம்மது அப்துல்லாஹ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எழுத்து பிழைகளை சரி செய்ய வேண்டுகிறேன்..

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.