அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Sunday, October 9, 2011

அவதூறுக்கு மறுப்பு - சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அவர்களின் பேட்டியின் காணொளி

கடந்த இரண்டு தினங்களாக சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அதன் நிர்வாகிகள் கூறும் விளக்கத்தின் காணொளி கிழே.










6 பின்னூட்டங்கள்:

முகம்மது said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மின்னஞ்சல் வழி கருத்து :
ஷம்சுல் சங்கத்தின் தன்னிலை விளக்கம் , அவதூறு பிரசாரத்திற்கு முற்றுபுள்ளி வைத்துள்ளது. நல்ல நோக்கத்திற்காக எடுத்த முயற்சியை எப்படியேனும் சீர்குலைக்க முயல்வது அரசியல் சித்தமாக இருக்கலாம் , ஆனால் , சமுதாய ஒற்றுமையை சீர் குலைக்க முயல்வது அதற்க்க ,
மீடியாக்களை தவறாக பயன் படுத்தவது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை..
chasecom razack

அதிரை தம்பி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சங்கநிர்வாகத்தினர் மனித நேய மக்கள் கட்சியினர் வெளியிட்ட நோட்டீஸிர்காக இந்த விளக்கம் அளித்திருப்பார்களானால் அது தேவையற்றதாகவே நான் கருதுகின்றேன். ஏனெனில் மமக வெளியிட்டுள்ள நோட்டீஸில் தெளிவாக 'மமக ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு வாக்களியுங்கள்' என்று அடிக்கப்பட்டள்ளதே தவிர 'மமக வேட்பாளருக்கு வாக்களியுங்கள்' என்று எங்கேயும் போடவில்லை. மமக ஆதரவு பெற்ற வேட்பாளர் என்றால் அதற்காக அவர் மமக வேட்பாளராக ஆகிவிடமாட்டார். மமக வேட்பாளர் என்பதற்கும் மமகவின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

வேண்டும் என்றே சங்கத்தின் முடிவை கொச்சைப்படுத்தி அதில் குளிர்காய நினைக்கும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

எனவே ஏதோ சிலர் வேண்டும் என்றே ஏற்படுத்தும் குழப்பத்திற்கு சங்க நிர்வாகிகள் பலியாகிவிடாமல் தங்களது பணியை தொடர்ந்து சிறப்பாகச் செய்யவேண்டும் என்பதே எனது கருத்து.

அபூ சுஹைமா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஷம்சுல் இஸ்லாம் சங்கம் ஆலோசனை கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டபோது, அஸ்லத்தை வெற்றி பெறச் செய்வதற்காகவே சங்கம் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதோ என்று நினைப்பதாக என் நண்பர் ஒருவர் கூறினார். ஆனால், இன்று சங்கம் மமகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

அனைவரையும் ஒரே நேரத்தில் திருப்பதிப்படுத்த முடியாது என்பதால், சங்கம் இத்தகைய குற்றச்சாட்டுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தன்னுடைய மற்ற பணிகளில் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.

அதிரை தம்பி...

//'மமக ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு வாக்களியுங்கள்' என்று அடிக்கப்பட்டள்ளதே தவிர 'மமக வேட்பாளருக்கு வாக்களியுங்கள்' என்று எங்கேயும் போடவில்லை.//

குறிப்பிட்ட அந்த நோட்டீஸில் "தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சிக்கு வாக்களியுங்கள். வாய்ப்பு தாருங்கள்" என்று கூறப்பட்டுள்ளது. இது அந்த அரசியல் கட்சியின் தவறுதானே ஒழிய, இதில் சங்கத்தின் தவறு இல்லை.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரை தம்பி நீங்கள் நன்றாக நோட்டீஸ்யை பாருங்கள் அதில் மனித நேய மக்கள் கட்சிக்கு வாக்கு அழியுங்கள் என்று போட்டுள்ளது

அதிரை தம்பி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அபூ சுஹைமா said:

//குறிப்பிட்ட அந்த நோட்டீஸில் 'தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சிக்கு வாக்களியுங்கள். வாய்ப்பு தாருங்கள்' என்று கூறப்பட்டுள்ளது.//

அதிரை வாய்ஸ் said...

//அதிரை தம்பி நீங்கள் நன்றாக நோட்டீஸ்யை பாருங்கள் அதில் மனித நேய மக்கள் கட்சிக்கு வாக்கு அழியுங்கள் என்று போட்டுள்ளது//

அபூ சுஹைமா மற்றும் அதிரைவாய்ஸிற்கு,

இந்த குற்றச்சட்டிற்கு நான் விளக்கம் அளிப்பதைவிட சம்பந்தப்பட்ட உள்ளுர் மமக நிர்வாகியே விளக்கமளித்துள்ளார். அந்தச் சுட்டியை பார்த்து உன்மையை புரிந்துக்கொள்வது நல்லது.

http://adiraibbc.blogspot.com/2011/10/blog-post_10.html

அபூ சுஹைமா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரை தம்பி,

மமக பொருளாளர் அவர்கள் அச்சுப் பிழை என்று ஒப்புக் கொண்டுள்ளார்கள். நாங்கள் சமுதாயத்துக்கு கட்டுப்பட்டவர்கள்; சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்கள். நம்முடைய இதயங்களை அறிந்தவன் அல்லாஹ் என்பதால் இப்பிரச்சனையை அப்படியே விட்டுவிட வேண்டும்.

தவறு மனித இயல்பு. நாமும் தவறு செய்யக் கூடும். ஆனால் அதனை ஒப்பக் கொள்ளும் பக்குவம் நமக்கு வேண்டும்.

மமக பொருளாளர் இத்தகைய நற்பண்பு கொண்டவர் என்பதை அவருடன் நெருங்கிப் பழகிய நான் நன்கறிவேன். அல்லாஹ் அவருக்கு அருள்புரியட்டும்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.