80 வருட பாரம்பரியமிக்கது நமதூரில் உள்ள ஷம்சுல் இஸ்லாம் சங்கம். சின்ன மக்கா என்றழைக்கப்படும் நமதூரில் இஸ்லாமிய முறைப்படி முறையாக பொதுமக்களால் மசூரா செய்து ஆலிம்களின் தலைமையின் கீழ் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டதே தற்போதைய ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளும், செயலாளர்களும். அவ்வகையில் முன்பைவிட தற்போதைய நிர்வாகிகள் முன் அனுபவமிக்கவர்களாகவும், சமூக அக்கறை கொண்டவர்களாகவும் உள்ளனர். தற்போதைய அநேக தீர்ப்புகளுக்கு ஆலிம்கள் வழிகாட்டுதல் பின்பற்றி நடந்துவருகிறது. அந்த அடிப்படையிலேயே தற்போது நடந்தவரும் உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும் சங்கத்திற்குட்பட்ட 6 வார்டுகளில் உறுப்பினர்களை முகல்லா வாரியாக விண்ணப்பங்களைப் பெற்று சங்கத்தின் சார்பில் தேர்தலில் நிற்க விண்ணப்பமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், தங்களது வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை நிறுத்தவேண்டாம் என்றும் மீறும்பட்சத்தில் அக்கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராக சங்கம் பிரச்சாரம் செய்யும் என்றும் சங்கத்தின் சார்பில் நமதூரில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியலில் பதவி வகித்தவர்களுக்கு பதவியில்லாவிட்டால் இருப்பு கொள்ளாது என்பார்களே அதேபோன்று தூண்டுதலின் பேரில் சிலர் 80 வருட பாரம்பரியமிக்க ஷம்சுல் இஸ்லாம் சங்கம்சங்கத்திற்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
அந்த புகாரில் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்களைப் பிரச்சாரம் செய்ய விடாமல் மிரட்டுவதாகவும், இடையூறு செய்வதாகவும் புகார் அளித்துள்ளனர். கரையர்தெரு, போன்ற தெருக்களில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு எதிராக தனது வேட்பாளர்களை நிறுத்தாத திமுக வினர் முஸ்லிம்கள் நிறைந்துள்ள, சங்கங்கள் நிறுத்தியுள்ள வேட்பாளர்களுக்கு எதிராக களம் அமைத்திருப்பது இளைஞர்களையும், பொதுமக்களையும் எரிச்சலடைய வைத்துள்ளது.
இந்த புகார் தொடர்பில் எழுத்துப்பூர்வமாக எழுதித் தருமாறு சங்க துணைச்செயலாளர் சகாபுதீன் அவர்களை காவல்துறை அழைத்துள்ளது. சங்கத்தில் பேசிவிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த திமுக, நில மோசடி புகாரில் அதன் முந்தைய அமைச்சர்கள் பலர் ஈடுபட்டு சிறைகம்பிகளை எண்ணி வரும் வேளையில், ஆளை விட்டா போதும் என்று உள்ளாட்சித் தேர்தலில் நிற்க பலர் ஓடி ஒளிந்துள்ளதாகவும், அதனால்தான் உள்ளாட்சித் தேர்தல் ஊர் நலனை மட்டுமே கருத்தில் கொண்டே அந்தந்த ஊர்களில் உள்ளவர்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று தடாலடியாக அறிவித்தார் கருணாநிதி. அதனால் ஏற்கெனவே சம்பாதித்த பணத்தை காப்பாற்றிக்கொள்ள எண்ணி அக்கட்சியினரின் அனுபவசாலிகள் பலரே தயங்கியுள்ளனர். (ஆதாரம்:மலேசிய நண்பன் தினப்பத்திரிக்கை).
சம்சுல் இஸ்லாம் சங்கம் எடுத்த முடிவிற்கு கட்டுப்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து அமீரகம், சவூதி போன்ற நாடுகளில் அதிரை ஐக்கிய ஜமாத் உருவாக்கி, புதிதாக சங்கக் கிளைகளை அமைத்து ஆதரவு பெருகிவரும் வேளையில், ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பதும் வேதனையளிக்கிறது. இந்நிலையில் அதிரை பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட மக்கள் வாக்களித்தாலும், வார்டு கவுன்சிலர் பதவிக்கு சங்கத்தின் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களின் எதிர்ப்பை ஓட்டு முலமாக தெரிந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.
10 பின்னூட்டங்கள்:
அட மு.க.வகையறாக்களா !!!
சங்கம் எங்களின் அங்கம்'னு இப்போதானேடாப்பா சொன்னீங்க ! அதுக்குள்ளேயுமா ?
இந்த (ச.இ) சங்கம் கர்ஜிக்கும் சிங்கம்(மாக) !
//அட மு.க.வகையறாக்களா !!!
சங்கம் எங்களின் அங்கம்'னு இப்போதானேடாப்பா சொன்னீங்க ! அதுக்குள்ளேயுமா ?
இந்த (ச.இ) சங்கம் கர்ஜிக்கும் சிங்கம்(மாக) !//
இல்லை! திருக்குவளை முத்துவேலார் கருணாநிதி(தி.மு.க) வகையறா..............................
Dear Brothers,
Assalamu alaikkum!
Actually I wanted to caution Adirai BBC abt this issue. We have been reading news papers that Police is arresting the villege leaders for auctioning the local body seats.
It is not proper on our part too to openly declaring this sort of vulnerable issues. Instead of blaming others let us resolve to elect our own member recommended by Shamsul Islam Association.
Do it by door canvassing but dont expose it.
N.A.Shahul Hameed
மின்னஞ்சல் மூலமாக :
சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் மீது போலீசில் புகார் , இது வேதனை தரும் செயலல்லவா ? சங்கத்திற்கு கட்டுபடாத , சம்பந்தபட்ட எதிர் வேட்பாளர்கள் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காத நிலையில் , வார்டு உறுப்பினர்களின் இச்செயல் நம் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் செயலை வன்மையாக கண்டிகின்றோம்.. கேவலம் 5 வருட பதவி மோகத்தின் விளைவு , காலம் தொற்று நம் சிநேகிதத்தை , உறவை முறித்து கொள்ளும் அளவிற்கு செல்ல வேண்டியி அவசியம் என்ன ? வெற்றி தோல்வி எல்லோருக்கும், எல்லா சூழ்நிலைகளிலும் ஏற்படும் , அதனை ஏற்பதுதான் மனிதனின் பண்பாடாகும். நிலையற்ற உலகத்தில் வாழ்ட்ந்து கொண்டிருக்கும் நாம் , பதவியை பெரிதாக்கி நம் ஒற்றுமையை குழைக்க முயல வேண்டாம் . சற்று சிந்தித்து செயல்பட முயற்சிக்க வேண்டுகிறோம். மாமன்னர்கள் மன்னை கவ்விய வரலாறு நம் முன் எடுத்துகாட்டாய் தெரியாமல் போனது என் ?
அப்துல் ராசாக் chasecom
///சற்று சிந்தித்து செயல்பட முயற்சிக்க வேண்டுகிறோம். மாமன்னர்கள் மன்னை கவ்விய வரலாறு நம் முன் எடுத்துகாட்டாய் தெரியாமல் போனது என் ?///
அவங்களுக்கு வரலாறு தெரியாதே !
வரலாறு படித்திருந்தாலோ அல்லது தெரிந்திருந்தாலோ இந்தக் காரியத்திற்கு நிச்சயம் உடண்பட்டிருக்கா வாய்ப்பில்லை !
தனிப்பட்ட தனிமனித விருப்பு வெறுப்புக்காக கன்னியமான பாரம்படியமிக்க சங்கதின் மீது புகார் கொடுத்ததை வன்மையாக கண்டிக்கிறோம் !
ஏன் மு.க.மட்டும் என்னவாம் அங்கும் இங்கும் வரலாற்றைப் புரட்டி புரட்டித்தானே கதைகளாகவும், கவிதைகளாகவும் எழுதி நமக்கெல்லாம் அவரின் இதயத்தில் தனியிட ஒதுக்கீட்டுடன் இடம் கொடுத்தே வைத்திருக்கிறாரே !
ஐயா ! இதயக் கதவைக் கொஞ்சம் திறந்து விடுங்களேன்... (மூச்சு முட்டுது) எங்க சங்கத்திற்கு எதிராக உங்க உடன் பிறப்பு ஏதோ புகார் அளித்திருக்கிறாய்ங்களாமே !!!
தரம் தாழ்ந்து வரும் தி மு க வினர் மேலும் மூர்க்கமாக சங்கத்தை எதிர்த்து காய்களை நகர்த்தினால் தி மு க என்ற கட்சிக்கு அதிராம்பட்டினத்தில் அங்கீகாரம் இல்லாமல் பொய் விடும் என்று எச்சரிக்கிறோம்...... மறுமை வெற்றியை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் ஆலிம்களை கொச்சை படுத்தும் விதமாக நடக்கும் அனைத்து பெயர் தாங்கி முஸ்லிம்களையும் இனம் கண்டு புறம் தள்ள வேண்டிய காலம் இது. இதுவும் நன்மைக்கே என்று நமது எதிர்கால நடவடிக்கையை செம்மையாக ஆக்க அல்லா அருள் புரிய துஆ செய்வோம்.
எற்கனவே இருந்து அனுபவித்து, ருசிகண்டு ஆப்பிளுக்கு ஆப்பு அடிக்க நினைத்தவர் செய்யும் மறைமுக சூழ்ச்சி! மக்களே சங்கத்துக்கு எதிராக போலீசில் புகார் கொடுப்பவர் நமக்கும் எதிரிதான். கவிழ்ப்போம் அவரை! அது சரி மு.க வகையறாவா "நெ"ஞ்சை நிமிர்த்தி ஒழுங்காக சொல்லுங்களேன்!
சங்கத்திற்கு எதிராக நிற்கும் வார்டு உறுப்பினர்களை தோல்வி அடைய செய்து. அவர்கள் யாரின் தூண்டுதலில் நிற்கிறார்களோ அவரையும் அவரை சார்ந்தவர்களையும் இத் தேர்தலின் மூலம் அடையாளம் கண்டு தனிமை படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து திமுக தலைமையகத்திற்கு புகர்மனு அனுப்ப முயற்சிக்கலாமே .இம்முயர்ச்சின் மூலம் நம் ஒற்றுமையை நமதூர் திமுக நகர செயலருக்கும் அவரின் விசுவாசிகளான நம்மில் ஒன்றாக கலந்துள்ள இனதுரேகிகளுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டூம்
அண்மைக்காலமாக ஆலிம்களின் கண்காணிப்பில் சிறப்பான முறையில் இயங்கி வரும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சமுதாய மக்களின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு எடுத்த முடிவுகளுக்கு எதிராக காவல்துறையில் புகார் கொடுத்தவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். புகார் கொடுத்தவர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் யார் என்பது தெளிவாகத் தெரிந்தால், அவர்கள் புகாரை திரும்பப் பெற்று பகிரங்க மன்னிப்பு கோராத வரை அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சங்கம் எந்த வகையிலும் ஒத்துழைப்பு தரக்கூடாது.
It is highly improper that whoever lodged a complaint against SHAMSUL ISLAM SANGAM at the Adirampattinam Police Station, it is shame on the people of our community also the person who made a complaint should try to realize how he was brought among our community to pronounce his name. Politics is not the only thing to make him progress in his life.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment